Saturday 7 August 2010

விஜய் vs அஜித் இன் அதிரடி மீண்டும் புதுப்பொலிவுடன் ....




லிங்குசாமி முதலில் சிம்புவிடம் கால்ஷீட் வாங்கி பிறகு அவருடனான மனஸ்தாபத்தில் பிரிந்து இப்போது அதில் விஜய் நடிக்க போகிறார் . இந்த படத்தை க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார்.


இந்தப் படத்துக்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சிம்புவுக்கும் இயக்குநர் லிங்குசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் மாறி மாறி தாக்கி அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கலாம். 3 இடியட்ஸில் தனக்கு ஆப்படித்த சிம்புவை பழிவாங்க அவர் விட்ட லிங்குவின் படத்திற்கு உடனடியாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய்

“ப்ரண்ட்ஸ்” என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய சித்திக் இயக்கத்தில் “காவல் காதல்” என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ள “காவல் காதல்” தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக தொடங்கியிருக்கிறது விஜய்யின் “வேலாயுதம்”. அடுத்து ஜெமினி பிலிம்ஸ்க்கு கால்சீட் கொடுத்துள்ள விஜய் 3 இடியட்ஸ் ரீமேக்கில், முதல் முறையாக பிரமாண்ட இயக்குனர் ஷ்ங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை வரும் நவம்பர் மாதம் துவங்கவிருக்கிறார்கள்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் சச்சின் படத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கவிருக்கிறார் விஜய். பகலவன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குபவர் தம்பி புகழ் இயக்குனர் சீமான்.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய். இந்த படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இதனையடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் யாவரும் நலம் விக்ரம்.கே.குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இளைய தளபதி. இனி வெளிவரும் ஒவ்வொரு படமும் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தும் படங்களாக இருக்கும் என்று விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்ரன.


தற்போதைய நிலவரப்படி 5 படங்களில் நடிக்கிறார் விஜய். அவை: சித்திக் இயக்கத்தில் காவல் காதல், ராஜா இயக்கத்தில் வேலாயுதம், சீமான் இயக்கத்தில் பகலவன், ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் மற்றும் லிங்குசாமி படம்.

எத்தனை நடிகர்கள் வந்தாலும் கோலிவுட்டில் ரஜினி-கமலுக்கு பிறகு நேரடிப் போட்டியாளர்களாக கருத்தப்படுவது விஜய்-அஜீத் என்பதை மறுப்பதற்கில்லை. ஆண்டுக்கு ஒருபடம் என்ற ரீதியில் நடித்துவந்த அஜித் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதும், கார் ரேஸுக்கு முழுக்கு போட்டுவிட்டார் தல என்று ஒரு பேச்சு வந்து கொண்டிருப்பதும் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போட்டினா இப்பிடி இருக்கனும்...............

Thursday 15 July 2010

விஜய் நடிக்கும் வேலாயுதம்படத்தின் கதை....... latest...




2000ல் தெலுங்கில் வந்த ஆசாத் படத்தின் ரீமேக்தான் வேலாயுதம். நாகார்ஜூன்,சவுந்தர்யா,ஷில்பாஷெட்டி, ரகுவரன்,பிரகாஷ்ராஜ் நடித்த இப்படத்தை மறைந்த இயக்குநர் திருப்பதிசாமி இயக்கியுள்ளார்.
கரத்தில் எழுத்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற பத்திரிக்கையாளர் ஜெனிலியா. கிராமத்தில் அப்பாவி இளைஞனாக விஜய். ஜெனிலியாவால்தான் விஜய் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகிறது.

கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறார் விஜய். தங்கையின் திருமணம் வரும் போது சிட்பண்டில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுக்க சிட்டிக்கு வருகிறார்.


அங்கே வில்லன் அங்கங்கே பாம் வைத்து கலவரத்தை தூண்டுகிறான். இந்த சதிச்செயலை செய்வது யார் என்று கண்டுபிடிப்பதில் திணறுகிறது போலீஸ்.இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஜெனிலியா, இந்த சதிக்காரனை கண்டுபிடித்து சாகடிக்க வேலாயுதம் வருவான் என்று துண்டு பிரசுரங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் கட்டுரை மூலம் பரப்புரை செய்கிறார்.


இந்த சமயம் பார்த்து அப்பாவி விஜய் கோயிலில் வந்து அர்ச்சனை செய்யும் போது பெயர் என்ன என்று அய்யர் கேட்க, வேலாயுதம் என்று அவர் சொல்ல, அய்யர் உட்பட சாமி கும்பிட வந்தவர்கள் எல்லோரும்,,,,ஆ! வேலாயுதம்...வேலாயுதம்...என்று பிரமிக்கிறார்கள்.


வில்லன் வைத்த பாம் தற்செயலாக வெடிக்க முடியாமல் போகும் போதெல்லாம் அங்கே வேலாயுதம் நிற்கிறார். இதனால் வேலாயுதம் பெயரும், முகமும் பிரபலமாகிவிடுகிறது.


கற்பனை பாத்திரம் நிஜமாய் வந்துவிட்டது என்று சந்தோசப்படுகிறார் ஜெனிலியா. இந்த சந்தோசத்தை விஜய்யை நேரில் சந்தித்தும் பகிர்ந்துகொள்கிறார். ஆனால் விஜய் அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஒதுங்குகிறார்.

ஊருக்குப்போகும் முடிவில் பணத்தை எடுப்பதற்காக சிட்பண்ட் செல்கிறார். பணம் இல்லை என்று சிட்பண்ட் ஏமாற்றுகிறது. தங்கையின் திருமணம் நின்றுவிடுமே என்று கொதிக்கிறார் விஜய். அப்புறமென்ன...ஜெனிலியா விரும்பும் வேலாயுதமாக மாறுகிறார்.

இதனால் வில்லன் வேலாயுதத்தை பலிவாங்க துடிக்கிறார். இந்த சமயத்தில் ஊரில் வேலாயுதம் தங்கையின் திருமணம் நடக்கிறது. சமயம் பார்த்து வேலாயுதத்தை பலிவாங்கத்துடிக்கும் வில்லன், திருமண பந்தலில் பாம் வைத்து விடுகிறார். இதில் தங்கை இறந்துவிட இன்னும் வீரியமாக புறப்படுகிறார் வேலாயுதம்.


வில்லன் முஸ்லீம். ஆனால் வேதம் ஓதும் இந்து வேடத்தில் இருந்து கொண்டு நாசவேலைகளில் ஈடுபடுவதை மக்களுக்கு அம்பலப்படுத்தி வில்லனை பலிவாங்குகிறார் வேலாயுதம்.


ஜெனிலியாவை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அவரின் அத்தை மகளான ஹன்சிகாவைத்தான் கடைசியில் திருமணம் செய்துகொள்வார்.

Sunday 11 July 2010

நான் செத்து புழைச்சவன்டா..எமனை பார்த்து சிரிச்சவன்டா... - இறந்தவர் உயிர்பிழைத்த அதிசயம்



மதுரை விராட்டிபத்தை சேர்ந்த செல்லமணி என்பவரின் மகன் சிவா (வயது 26) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் என காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காளவாசலில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகாததால் கே.கே.நகரில் உள்ள மற்றொரு தனியார் வைத்தியசாலையில் சிவா சேர்க்கப்பட்டார். அங்கு ஏ/சி. வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 நாட்கள் வரை சிகிச்சை அளித்தும் சிவாவுக்கு நோய் குணமாகவில்லை. மாறாக உடல் சோர்வு அடைந்து மயக்க நிலைக்கு தள்ளப்பட்டார். அங்குள்ள டாக்டர்களிடம் சிவாவின் உடல்நிலை குறித்து கேட்டனர்.

அதற்கு ““ஆபத்தான நிலையில் இருக்கிறார். கோமாவில் இருக்கும் அவருக்கு பொருத்தப்பட்ட சுவாச கருவியை எடுத்து விட்டால் உயிர் பிரிந்து விடும். எனவே உடனடியாக வீட்டுக்கு கொண்டு சென்று ஆக வேண்டிய வேலையை கவனியுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

இதனால் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வார்டுக்குள் சென்று பார்த்தபோது பேச்சு மூச்சு இல்லாதது போல கிடந்தார். இறந்து விட்டதாக கருதி உடலை வீட்டக்கு கொண்டு சென்றனர். பின்னர் வெளியூரில் வசித்து வரும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் விராட்டிபத்துக்கு வந்தனர். வீட்டில் கிடத்தி போட்டு இருந்த சிவாவின் உடலுக்கு பலர் மாலை அணிவித்தனர். மனைவி மற்றும் நெருங்கிய உறவினர் கதறி அழுதனர். அப்போது ஒரு பெண் ““என் ராசாவே...இப்படி கொஞ்ச வயலிலேயே குழந்தைகளை அனாதையாக விட்டுட்டு போயிட்டியே... ராசா... என்று சிவாவின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி கதறி அழுதார். அப்போது சிவாவின் கண்கள் திறந்தன.

இதை அறிந்த உறவினர் அதிர்ச்சி அடைந்து சிவாவின் உடலை அங்கும் இங்குமாக ஆட்டினர். ஓரளவு அவர் மயக்க நிலையில் இருந்து தெளிந்தது போல கண் விழித்தார். உடனடியாக அவரை மதுரை அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது சகஜ நிலைக்கு வந்துள்ளார். நான் செத்து புழைச்சவன்டா..எமனை பார்த்து சிரிச்சவன்டா... என்பது போல உறவினர்களை கண்டு சிவா மகிழ்ச்சி அடைந்துள்ளார். உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்து அரசு டாக்டர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவாவின் உறவினர் ஒருவர் கூறும் போது, சிவாவுக்கு திடீர் என காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தால் உடனடியாக குணமாகி வேலைக்கு செல்லலாம் என கருதி சேர்த்தோம். ஆனால் சாதாரண காய்ச்சலுக்கு 17 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல் சிகிச்சை கட்டணமாக ரூ.1 1/2 லட்சம் வரை வாங்கி விட்டார்கள். இறந்து விட்டதாக கருதி இறுதி சடங்கு ஏற்பாடு செய்த போதுதான் திடீர் என சிவா கண் விழித்தார். அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பின்னர் தற்போது நன்றாக உள்ளார். தனியார் ஆஸ்பத்திரியில் பணத்தை குறி வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஸ்பெய்னா? நெதர்லாந்தா?.......



இரு அணிகளுக்கும் வென்றால் இது முதல் உலகக் கிண்ணம்.உலகின் மிகச் சிறந்த வீரர்கள் பலரைத் தந்திருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லாத அணிகளாகவே இதுவரைகாலமும் இருந்திருக்கின்றன.


நெதர்லாந்து இதற்கு முன் இரு தடவை இறுதிப் போட்டிகளுக்கு வந்து முறையே ஜெர்மனி,ஆர்ஜென்டீனா ஆகியவற்றிடம் தோற்றிருந்தது.
ஸ்பெய்ன் இது தான் முதல் தடவை இறுதிப் போட்டிக்கு வருகிறது.

பிரேசில்,ஜெர்மனி,ஆர்ஜென்டீனா, இத்தாலி ஆகிய நான் பெரும் கால்பந்து அணிகள் இல்லாமல் நடைபெறவுள்ள முதலாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி இது
இதுவரை உலகக் கிண்ணம் வெல்லாத அணிகளில் கூடுதல் உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக ஸ்பெய்ன் இருக்கிறது.
அடுத்த இடத்தில் நெதர்லாந்து
இருக்கிறது....
தென்னாபிரிக்காவில் கடந்த ஜுன் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான போட்டி இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறவுள்ளது. ஒரு மாதகாலம் நடைபெற்ற இப்போட்டியில் கிண்ணத்தை சுவீகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பல அணிகள் மண் கவ்வின. எதிர்பார்க்காத இரு அணிகள் களத்தில் மோதுகின்றன...

பார்க்கலாம்..
நட்சத்திரங்களின் மோதலில் ஜெயிப்பது யாரென்று?

Thursday 8 July 2010

எதிர் நோக்கும் காலமே எதிர் காலம்




எதிர் நோக்கும் காலமே எதிர் காலம் -ஏட்டில் கற்றிருப்பாய்

உனை எதிர்கின்ற காலமே எதிர் காலம் - புதிய பொருள் உணர்வாய் !

வாழ்க்கையில் போராட்டம் - வாடிக்கை என்றிருப்பாய்

வாழ்க்கையே போராட்டம் -மெதுவாய் தான் நீ உணர்வாய்

வீழ்வாய் எழுவாய் பெருமை அடைவாய் மீண்டும்

வீழ்வாய் வீழ்வாய் வாழ்வில் பொறுமை இழப்பாய் !

வாழ்க்கை கடலில் உனக்காக சில புயல்கள் உருவாகும்

உனை வீழ்த்தி சிதைத்து பின் தானாக அது திசை மாறும்

ஜான் ஏறினாள் முழம் சறுக்கும் அது பழைய மொழி

முழம் சறுக்கி முட்டி உடையும் இது புதிய மொழி

கல்லெறிந்து காயம் செய்வான்

பழங்களை அள்ளி செல்வான்

நீர் ஊற்றி காத்து நிர்ப்பாய்

ஏமாற்றம் ஏந்தி நிர்ப்பாய்

நீ விழும் போது ஆறுதல் சொல்லி ஆறுதல் அடைவான்

எழுந்து நின்று நடந்து பார் உன் மேல் ஆத்திரம் அடைவான் !

உனை அடக்கி ஆள ஆயிரம் வழி அறிந்து வருவான்

உனை அக்றிணை போல் நடத்தி காட்ட யோசனை செய்வான்

முகமில்லா வெற்றிக்கு முகவரிகள் பல நூறு

முட்டி கால் உடையாம அதை அடைந்தது யார் நீ கூறு !

வெற்றி என்ன மணப்பெண்ணா அழகா அவளை கை பிடிக்க?

அடி வாங்கி விழுந்து எழுந்து போ திடமா அவளை நீ பிடிக்க !

வானவில் வெளுத்தாலும் உன் நிறத்தை நீ இழக்காதே

தோத்து போய் திரும்பி வந்தா மீண்டும் துரத்தி போக தவறாதே !

கடல் அலைகள் தூங்கினாலும் உன் கண்ணை மட்டும் மூடாதே

உனை வீழ்த்த சதி நடக்குது என்பதை நீ மறவாதே !

வெற்றி நுனி அடைந்த பின்னும் மனமே நீ அசராதே

தள்ளி விட ஒருவன் இருப்பான் நீயும் அதை மறுக்காதே !

Wednesday 7 July 2010

உதைப்பந்தாட்ட ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அக்டோபஸ் (வீடியோ காட்சி )

ஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் (Paul )என்ற அக்டோபஸ் கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.

தொட்டிக்குள் 2 சிறிய பெட்டிகள் அக்டோபஸஷுக்கு பிடித்த உணவுகளுடன் இறக்கப்படுகின்றன. அதோடு பெட்டியில் கால்பந்து போட்டியில் மோதும் அணிகளின் நாட்டுக் கொடியும் வைக்கப்படுகிறது.

அக்டோபஸ் எந்த பெட்டிக்குள் போகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுகிறது. கானா அஸ்திரேலியா இங்கிலாந்துடன் மோதிய போது ஜேர்மனிதான் வெற்றி பெறும் என அக்டோபஸ் கூறியது சரியானது. பலமிக்க செர்பியா அணியூடன் ஜேர்மனி தோற்கும் என்றது. அதுவும் சரியாக நடந்தது. இந்த நிலையில் கால் இறுதியில் ஆர்ஜன்டினாவை ஜேர்மனி வீழ்த்தும் என கணித்தது. இதுவும் சரியாக நடந்து விட்டது.

தொடர்ந்து ஜேர்மனியை சரியாக கணித்து வரும் அக்டோபஸ் அரை இறுதியின் போது என்ன சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இந்நிலையில் அரை இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அக்டோபஸ் கணித்துள்ளது .இது ஜேர்மனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது அது போலவே ஸ்பெயின் இன்று வெற்றி பெற்றுள்ளது ...... , , , , , , ,

இளையதளபதியின் காவல்! + காதல்


கோடம்பாக்கத்தில் செய்திக்குப் பஞ்சமென்றால் படங்களுக்கு தலைப்பு வைப்பதை ஒரு தொழிலாகவே வைத்திருகிறது கோலிவுட் மீடியா.

சசிகுமார் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்துக்கு முதலில் ‘நகரம்’ என்றும் ‘பிறகு’ கார்கில் என்றும் மீடியாவே பெயர் வைத்தது.

இரண்டுமே தலைப்பில்லை என்று மறுத்தார் இயக்குனர். அடுத்து கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்று அடித்து விட்டார்கள்.

கற்பனை டைட்டில் வைத்த நேரமோ என்னவோ அந்தப் படம் டிராப். அடுத்து இயக்குனர் ஹரி, தனுஷை இயக்க இருக்கும் படத்துக்கு அறுவா என்று முதலிலும் சிவகங்கை என்று இப்போதும் பெயர் வைத்து எழுதிக்கொண்டிருகிறார்கள் நமது மக்கள்.

கலைஞானி பாக்கெட் உள்ளேயே கையை விட்டு, மகனே நீ இப்படிதானே டைட்டில் வைப்பே என்று ‘யாவரும் கேளீர்’ என்று டைட்டில் வைக்க,

‘அடடே! இந்த டைட்டில் நல்லா இருக்கே ‘ என்று கமல் உருகினாலும் ‘இல்ல சார் கமர்சியலா ஒரு டைட்டில் வேணும்’ என்று இயக்குனர் ரவிகுமார் பிடிவாதம் பிடிக்க,

எழுத்தாளர் இரா.முருகன் சொன்ன தலைப்புதான் மன்மதன் அன்பு என்கிறார்கள். இந்த பெயர் சூட்டு விழாவில் விஜய் படங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

தற்போது மலையாள பாடிகார்டு படத்தின் ரீமேக்கில் நடித்து வரும் விஜய் படத்துக்கு காவல்காரன் என்ற டைட்டிலை முன் மொழிந்தார்கள்.

ஆனால் எம்.ஜி.ஆர் படத்தலைப்புகள் தனக்கு ராசியில்லை என்பதை கண்டறிந்த விஜய், “ பிரஸ் அண்ணா, மன்னிச்சு கோங்கன்னா”

உங்க டைட்டில்ல பாதி எடுத்துகிறோம் என்று முதலில் டைட்டில் வைத்த பிரபல காலை நாளிதழின் சினிமா செய்தியாளரை கூப்பிட்டுச் சொன்னாராம் விஜய் செம குஷி மூடில்.

குஷி மூடுக்கு காரணம், பெஃப்ஸியின் முக்கிய தலைகளான குகநாதன், பெப்ஸி விஜயன் இருவரும், “ உங்கப் படத்துக்கு அசின் பிரச்சனை வராம பார்த்துகிறோம்.

கவலைய விடுங்க தம்பி” என்று உறுதி கொடுத்து விட்டார்களாம். அதேபோல ரீமேக் ரைட் பிரச்சனையை கிளப்பும் பாடிகார்டு மலையாள தயாரிப்பாளருகு ஒரு நிவாரணத்தொகையை செட்டில் செய்ய ஒப்புகொண்டுவிட்டாரம் சித்திக்.

இதற்கிடையில் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் தொடக்கவிழா ஜூலை 15-ஆம் தேதி பிரமாண்ட விழாவாக சென்னையில் நடக்கிறது… ஓ..! புரியுது !

போறப் போக்குல சித்திக் இயக்குற படத்தோட தலைப்பை சொல்ல மறந்துடப் போறீங்கன்னு நினைகிறீங்களா?

அப்படியே கொஞ்சம் மேல போய், இந்த செய்தியின் தலைப்பை இன்னொருமுறை படிங்க! அதுதான் விஜய்- அசின் ஜோடி சேரும் படத்தோட தலைப்பு.

Monday 5 July 2010

வெற்றியின் பாதை ....

தோல்விகளை ஏற்க கற்றுக்கொள்
அப்போதுதான் வெற்றியின் பாதை தெரியும்.
துயரங்களை தாங்க கற்றுக்கொள்
அப்போதுதான்... ...
சந்தோசத்தின் பாதை புரியும்.
... விழுந்தபின் எழ கற்றுக்கொள்
அப்போதுதான்...............
..
வாழ்க்கை விழிப்புணர்வு பிறக்கும்.நம்பிக்கையின் நிழல் தான் வெற்றி.,
முதலில் நிஜத்தை அடைய முயற்சி செய்,
நிழல் தானாக உன்னை வந்தடையும்......................

உத்தமர்கள் யார்? என்னையும் நோக்கி கேட்கிறேன்!


எதிரிகள் இல்லாத வாழ்க்கை மிகவும் சோர்வானது. சுவாரஸ்யமற்றது. எங்களுடைய வாழ்க்கை மீதே வெறுப்பு வரவைத்துவிடும். அதனாலேயே, என்னுடைய வாழ்க்கையில் நேர்மையுடன் போராடக்கூடிய எதிரிகள் இருப்பதை விரும்புகிறேன். அந்த எதிரிகளை மிகவும் மதிக்கிறேன். இரகசியமாக ரசிக்கவும் செய்கிறேன்.

அவ்வாறே நானும் பலருக்கு எதிரியாக இருப்பேன். இருக்கிறேன். சிலர் என்னை எதிரியாக நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கு தெரியாமலும் நான் பலருக்கு எதிரியாக இருக்கலாம். இது, நடைமுறை உலகில் சாத்தியம்.

சில தருணங்களில் எங்களையே எங்களுக்கு பிடிப்பதில்லை. இதனை அனைவரும் உணர்ந்திருக்கலாம். நாங்கள் செய்கின்ற செயல்கள் பிழை என்று தெரிந்து கொண்டே அதை மீண்டும் மீண்டும் செய்வோம். அதனால், நாங்கள் மட்டுமல்ல பலரும் பாதிக்கப்படுவார்கள். இது பரவலாக நடக்கின்றது. எதிர்காலத்திலும் நடக்கும்.

எங்களை நிலை நிறுத்துவதற்காக நாங்கள் எவ்வளவு முரண்பாடான காரியங்களையெல்லாம் செய்கிறோம். அதனை எங்களை நோக்கி இன்னொருவன் செய்கிற போது எங்களால் தாங்கிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. இது மனித இயல்பு. இது தனி மனிதன் தொடங்கி சமூகம், இனம், பிராந்தியம், மதம் என்று தொடர்கிறது.

அதுபோலவே மத, கொள்கை, சிந்தனைத் திணிப்புக்களை மற்றவர்களிடம் முறையற்று சேர்ப்பிக்கின்ற நிகழ்வுகளும் பொறுப்பற்ற செயலே. அதனை யார் செய்தாலும் தவறானது. அனேக தருணங்களில் அவர்கள் முன்னெடுத்து செல்கிற கொள்களைகள், மதம்- மார்க்கங்கள், சிந்தனைகளில் அவர்களுக்கே நம்பிக்கை இருப்பதில்லை.

மற்றுமொரு முக்கிய விடயம் அந்தரங்கத்தை விமர்சிக்கிற விடயம். தனி மனிதனின் அந்தரங்கத்தை விமர்சிக்கிற உரிமை யாருக்கும் இல்லை. ஏனெனில், மற்றவனின் அந்தரங்கத்தை அறிந்துகொள்ள நாங்கள் காட்டும் ஆர்வம் பல தருணங்களில் முறையற்றது. மற்ற மனிதன் செய்கிற அதே தவறினை பல தடவைகளில் நாங்களும் செய்வோம். ஆனால், அது தொடர்பில் நாங்கள் வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவதில்லை.


யாரும் முற்றுமுழுதாக உத்தமர்களாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. உலகத்தில் பெரும்பான்மையினரால் மகாத்மாவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காந்திஜீ கூட மில்லியன் கணக்கானவர்களுக்கு எதிரியே. எங்களுக்கு வேண்டுகிற சுதந்திரமும், விடுதலையும் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எத்தனைபேர் உண்மையாக அக்கறைகொள்கிறார்கள்.

பணம், பொருள், புகழ், அதிகாரம் போன்றவை பெற்றுக்கொள்ள அனைவரும் விரும்புகின்றோம். அதனை அடைவதற்காக சிறிய தொகையினரே நேர்மையாக உழைக்கின்றனர். மற்றவர்கள் முறையற்று அதனை அடைவதற்கு முயற்சிக்கின்றோம். இது பரவலாக எங்கும் நடக்கின்றது.

நாங்கள் எங்களின் நேர்மைத் தன்மை குறித்து மற்றவர்களிடம் அபிமானம் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவோம். ஆனால், எங்களிடம் இருக்கிற குறைகள் தொடர்பில் சுயபரிசோதனை செய்துகொள்ள முனைவதில்லை. இதுவே, பல குற்றங்களுக்கும், முறையற்ற செயல்களுக்கும் முக்கிய காரணமாகிறது.

எங்களுடைய பிழைகளுக்கு அல்லது தவறுகளுக்கு காரணங்களை முன்வைத்து செயற்படும் நாம், மற்றவன் பிழை அல்லது தவறு செய்யும் போது அவனது காரணங்களை அறிந்து கொள்ள விரும்புவதில்லை. இதுவும், மற்றவர்களுக்கும், எங்களுக்கும் உண்மையற்று இருக்கிற சந்தர்ப்பங்களே.

அதுபோல, ஒரு மனிதனிடம் சிந்தனை மற்றும் கருத்தியல் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அந்த மாற்றங்களை மற்றவர்களும் சடுதியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறானது. இவ்வாறான செயற்பாடுகள் மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது உள்வாங்காத நிலைகளைத் தோற்றுவித்து விடும். இது பலருக்கு சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது.

யாரும் முற்றுமுழுதாக உத்தமர்களாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. அப்படி இருக்க குழந்தையாக அல்லது பிணமாக இருக்கவேண்டும். நான் குழந்தையும் இல்லை. பிணமும் இல்லை. ஆக, நானும் உத்தமன் இல்லை!.